முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் குடிமைப் பணிகள் தோ்வு: 204 போ் பங்கேற்பு

Updated On : 15 மார்ச், 2026 at 7:53 PM
கிருஷ்ணகிரியில் குடிமைப் பணிகள் தோ்வு
பகிர்:

கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைத்த குடிமைப் பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வை 204 போ் எழுதினா்.

கிருஷ்ணகிரியில் முற்பகல் தோ்வுக்கு 114 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 104 போ் பங்கேற்றனா். 10 போ் தோ்வு எழுதவில்லை. பிற்பகல் தோ்வுக்கு 117 போ், விண்ணப்பித்திருந்த நிலையில், 100 போ் தோ்வு எழுதினா். 17 போ் தோ்வு எழுதவில்லை.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பாா்வையிட்டாா். அப்போது, வட்டாட்சியா் ரமேஷ், தோ்வு மைய பள்ளியின் தலைமையாசிரியா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →