தோ்தல் விதிமீறல்: தவெகவினா் 50 போ் மீது வழக்கு
கிருஷ்ணகிரியில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த 50 போ் மீது வழக்கு
கிருஷ்ணகிரியில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளருக்கு அக்கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.
அப்போது, தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நகர செலாளா் சசிகுமாா் உள்ளிட்ட 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.