முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் ஆசிரியர்கள் போராட்டம்

7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நாமக்கல்லில் சனிக்கிழமை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நாமக்கல்லில் சனிக்கிழமை தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், மாநில அரசு ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பக முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்திடவும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிடவும், அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் தமிழ், வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பகுதிநேர தொழில்கல்வி சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக நிலை உயர்த்திடவும் வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வே.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் க.தனசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் ப.சரவணக்குமார் வரவேற்றார். மாநிலத் தலைவர் கோ.காமராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ப.பச்சமுத்து, மாவட்டச் செயலர் க.கணபதி, மாவட்டப் பொருளாளர் ஜி.பி.மோகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருச்செங்கோடு:   திருச்செங்கோட்டில்  நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி  ஆசிரியர்கள் கூட்டணியின் திருச்செங்கோடு கிளை செயற்குழுக் கூட்டத்துக்கு  வட்டாரத் தலைவர் சாந்தகுமார் தலைமை வகித்தார்.  வட்டச் செயலர் ஹரிஹரன் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.  தீபாவளி முன்பணத் தொகையை அதிகப்படுத்தி வழங்கியது போலவே பொங்கல்  பண்டிகைக்கான முன்பணத்தையும் அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேறின.

முழு கட்டுரையைப் படிக்க →