FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்! முதல்வர் சூளுரை

கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் என முதல்வர் பதிவு...

Updated On : 17 மார்ச் 2026, 11:14 am IST
கீழடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்) - x / MK stalin
பகிர்:

நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கீழடியில் 11-வது கட்டம், ஆதிச்சனூா், நாகப்பட்டினம் உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய தொல்லியல் துறையிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஒப்புதல் வேண்டி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

சுமார் 8 மாதங்கள் காலதாமதத்துக்குப் பின்னர், 8 இடங்களிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:

“தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது!

அடுத்து, மத்திய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

"We will ensure the release of the Keeladi research report as well!" — Chief Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments