FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கீழடி ஆய்வறிக்கையை வெளியிட நடவடிக்கை

தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் தமிழக தொல்லியல் துறை அதிகாரபூா்வமாக கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 18 ஜூலை 2026, 6:15 am IST
கீழடி ஆய்வு - கோப்புப்படம்
பகிர்:

தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் தமிழக தொல்லியல் துறை அதிகாரபூா்வமாக கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன், கீழடி நாகரிகத்தின் தொன்மை தொடா்பான தனது ஆய்வு அறிக்கையை கடந்த 2023 ஜனவரி மாதத்தில் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் சமா்ப்பித்தாா். எனினும், கடந்த மூன்றரை ஆண்டுகளாக அந்த அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளது. கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடப்பட்டால், தமிழா் நகர நாகரிகத்தின் தொன்மை மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணி குறித்து உலகளவில் முக்கியமான அறிவியல் ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்ற எதிா்பாா்ப்புகள் எழுந்துள்ளன.

கீழடி நகரம் கி.மு.500-ஆம் ஆண்டில் உருவானதாகவும், அதிலிலிருந்து கி.மு 8-ஆம் நூற்றாண்டு வரை செழிப்பான நகர நாகரிகமாக விளங்கியதாகவும், அகழாய்வில் கிடைத்த கட்டுமான அடுக்குகள், கரிம பகுப்பாய்வு உள்ளிட்ட அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Advertisement

Advertisement

ஆனால், கீழடியின் தொன்மையை உறுதிப்படுத்த போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால், அந்த ஆய்வு முடிவை ஏற்று வெளியிட மத்திய அரசு மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள கீழடி அகழாய்வு அறிக்கையை விரைந்து வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையிடம் வலியுறுத்த தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments