கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
திருச்செங்கோடு அருகேயுள்ள கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
திருச்செங்கோடு அருகேயுள்ள கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
மாணவர் நந்தகுமார் 1170 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
பாட வாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-191, ஆங்கிலம்-190, இயற்பியல்-191, வேதியியல்-200, கணிதம்-198, கணிப் பொறியியல்-200.
Advertisement
Advertisement
மாணவர் கவின் வேதியியல், கணிதம், உயிரியல் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 பெற்றுள்ளார். வேதியியல் பாடத்தில் நந்தகுமார், பரத்குமார், கவின் ஆகியோர் 200-க்கு 200 பெற்றுள்ளனர். கணிதத்தில் விஷ்ணு, கவின் இருவரும் 200-க்கு 200 பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் கவின் 200-க்கு 200 பெற்றுள்ளார். கணிப்பொறியியல் பாடத்தில் ரம்யா, செüம்யா, நந்தகுமார், ஆனந்தராஜ், விஷ்ணு, நந்தினி ஆகியோர் 200 -க்கு 200 பெற்றுள்ளனர்.
தவிர, 1100-க்கு மேல் 44 பேரும், 1000-க்கு மேல் 102 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் சண்முகசுந்தரம், இயக்குநர்கள் சிவா, வித்யா சிவா, தலைமை ஆசிரியை கலாவதி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.