நாமக்கல்

எஸ்எஸ்எல்சி. தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகள்

DIN

பொம்மைக்குட்டைமேடு காமராஜர் பள்ளி
நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டைமேடு காமராஜர் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய 295 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதில் ஒரு மாணவி 498 மதிப்பெண்களும், ஒரு மாணவர் 497 மதிப்பெண்களும், இரண்டு பேர் 496 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தேர்வெழுதிய மாணவர்களில் 495 மதிப்பெண்கள் 4 பேரும், 490-க்கு மேல் 30 பேரும் பெற்றுள்ளனர்.
கணிதத்தில் 25 பேரும், அறிவியலில் 57 பேரும், சமூக அறிவியலில் 98 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் கல்வி நிறுவனத் தலைவர் ஆர்.நல்லதம்பி, செயலர் சதாசிவம், இயக்குநர்கள் பாராட்டினர்.

பரமத்தி வேலூரில்...
நல்லூர் கந்தம்பாளையம் எஸ்.கே.வி பள்ளி மாணவ, மாணவியர் 10-ஆம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பெற்றனர்.
இந்தப் பள்ளியில் இருவர் 498 மதிப்பெண்களும், மூன்று பேர் 497 மதிப்பெண்களும், 6 பேர் 496 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
தமிழ் பாடத்தில் ஒருவரும், கணிதத்தில் 36 பேரும், அறிவியலில் 57 பேரும், சமூக அறிவியலில் 120 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 495-க்கு மேல் 17 பேரும், 490-க்கு மேல் 52 பேரும், 480-க்கு மேல் 103 பேரும், 450-க்கு மேல் 213 பேரும், 400-க்கு மேல் 326 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தலைவர் ரவி, பொருளாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம், இயக்குநர்கள், முதல்வர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT