நாமக்கல்

குமாரபாளையத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

DIN

குமாரபாளையத்தில் நீரேற்று நிலையத்துக்குச் செல்லும் பிரதான குழாய் உடைப்பால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வெளியேறி, வீணாகி வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குமாரபாளையம் காவேரிநகர் பகுதியில் உள்ள காவிரி நீரேற்று நிலையத்திலிருந்து எடப்பாடி சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாய் வழியாக அரசு மருத்துவமனை அருகேயுள்ள நீரேற்று நிலையத்துக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோம்புப் பள்ளம் அருகே சாலையோரத்தில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து, தண்ணீர் செல்லும் போது அதிகளவில் குடிநீர் வெளியேறி, சாக்கடையில் சென்று கலக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகமும், அப்பகுதியில் சிறுபாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத் துறையினரும் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தண்ணீர் தட்டுப்பாட்டால் நகரப் பகுதியில் இரு நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. பொதுமக்கள் குடிநீருக்காக பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில், கண்ணெதிரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT