நாமக்கல்

பள்ளி மாணவர்களுக்கு  டெங்கு விழிப்புணர்வு

DIN

எர்ணாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு எதிர்ப்பு தினம் எர்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சித்த மருத்துவ ஆலோசகர் பூபதிராஜா பங்கேற்று, டெங்கு காய்ச்சல் அறிகுறி, கட்டுப்படுத்தும் முறைகள், சுகாதார வழிமுறைகள், சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு இலைச்சாறு பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கம் அளித்தார்.  மாணவர்கள் டெங்கு எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.  370 மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்வில் மருத்துவ அலுவலர் ஆ.நிவேதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் ராஜகணபதி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைமையாசிரியர் மேனகா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT