நாமக்கல்

இந்திய குடிமைப் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி: மீனவ சமுதாய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

இந்திய குடிமைப் பணி தேர்வுக்கு அளிக்கப்படும் இலவசப் பயிற்சியில் சேர மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) சார்பில் ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த படித்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் இப் பயிற்சியில் சேரலாம். இத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவம், அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத் துறையின் இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பப் படிவத்தை மேட்டூர் அணையில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு அலுவலக வேலை நாள்களில் நேரில் அணுகி விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்வளத் துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மேட்டூர் அணை,  மீன்வள உதவி இயக்குநர் அலுவலத்துக்குப் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04298-244045 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT