நாமக்கல்

அம்பேத்கர் பிறந்தநாள் விழா 

தினமணி

ராசிபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பல்வேறு அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 ராசிபுரம் நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அம்பேத்கர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பழைய பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் உருவ படத்திற்க்கு மாலை அணிவிக்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மணிமாறன், நகரச் செயலாளர்ஆதவன், நிர்வாகிகள் குமணன், மாதேஸ்வரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
 ராசிபுரம் நகர பாஜக சார்பில் நடைபெற்ற விழாவில் அம்பேத்கர் சிலைக்கு நகர தலைவர் எம்.மணிகண்டன் தலைமையிலும், குருசாமிபாளையத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பிள்ளாநல்லூர் பேரூர் தலைவர் ஆறுமுகம் தலைமையிலும், அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவில் நகரச் செயலர் எம். பாலசுப்பிரமணியம் தலைமையிலும், அமமுக சார்பில் நகரச் செயலர் ராஜேந்திரன் தலைமையிலும், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நகரச் செயலர் சேகுவேரா தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT