திருச்செங்கோட்டில் வரும் 22-ல் ஜி குளோபல் சர்வதேச பள்ளி திறப்பு விழா: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பள்ளிப்பாளையம் சாலையில் ஜி குளோபல் சர்வதேச பள்ளியின் திறப்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பள்ளிப்பாளையம் சாலையில் ஜி குளோபல் சர்வதேச பள்ளியின் திறப்பு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது.
பள்ளியின் தலைவர் டாக்டர் எஸ். குணசேகரன் அனைவரையும் வரவேற்கிறார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி தலைமை வகித்து, பள்ளியின் ஆப்பிள் கணினி ஆய்வகத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பள்ளியைத் துவக்கி வைத்து, விழா பேருரையாற்றுகிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நூலகத்தைத் திறந்து வைக்கிறார்.
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா கலை மற்றும் கைவினைக் கூடத்தைத் திறந்து வைத்துப் பாராட்டிப் பேசுகிறார். நாமக்கல் எம்.பி ., பி. ஆர். சுந்தரம் பள்ளியின் நடன அரங்கத்தைத் திறந்து வைக்கிறார்.
மேலும், இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் பங்கேற்று உள்விளையாட்டு அரங்கத்தையும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அர. அருளரசு நீச்சல் குளத்தையும், திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பொன். சரஸ்வதி பள்ளி வளாகத்தில் கே1 வகுப்பறையையும், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் கே2 வகுப்பறையையும் , சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி. சந்திரசேகரன் கே3 வகுப்பறையையும் திறந்து வைத்துப் பேசுகின்றனர்.
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப. உஷா, மாவட்ட கல்வி அலுவலர் கே. அருளரங்கன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். பள்ளியின் மேலாண்மை இயக்குநர் ஜி. வெற்றிச்செல்வன் நன்றி கூறுகிறார். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்துவருகிறது.