வெண்ணந்தூர் பொதுக்கிணறு அருகில் குளியலறை : காங்கிரஸ் கட்சி கோரிக்கை
வெண்ணந்தூர் பொதுக் கிணறு அருகில் பெண்கள் குளிக்க குளியலறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல்வெண்ணந்தூர் பொதுக்கிணறு அருகில் குளியலறை : காங்கிரஸ் கட்சி கோரிக்கை
வெண்ணந்தூர் பொதுக் கிணறு அருகில் பெண்கள் குளிக்க குளியலறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வெண்ணந்தூர் பொதுக் கிணறு அருகில் பெண்கள் குளிக்க குளியலறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வெண்ணந்தூர் நகர காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நகரத் தலைவர் கே.சிங்காரம் தலைமையில் வெண்ணந்தூரில் அண்மையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் கே.எம். முனியப்பன், கே. தங்கமுத்து, வி. காசிபெருமாள் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் பி.கே. செங்கோடன் முன்னிலை வகித்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கலால் வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
வெண்ணந்தூரில் ஈமச்சடங்கு நடைபெறும் பொதுக் கிணறு அருகில் பெண்கள் குளிக்க குளியலறையைக் கட்டிக் கொடுக்க வேண்டும். வெண்ணந்தூர் அண்ணா சிலை அருகில் பயணிகள் நிழற்கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.