நாமக்கல்

பரமத்தி வேலூர் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

தினமணி

பரமத்தி வேலூர் தினசரி பூக்கள் ஏலச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் விடுகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.500-க்கும், முல்லை பூ கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி கிலோ ரூ.250-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.150-க்கும் ஏலம் போனது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.700-க்கும், முல்லை பூ கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி கிலோ ரூ.300-க்கும், அரளி கிலோ ரூ.250-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் ஏலம் போனது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்வால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT