நாமக்கல்

காமராஜர் பள்ளியில் மாணவர்களுக்கு தினமணி நாளிதழ், மரக்கன்றுகள் அளிப்பு

DIN

பள்ளி மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும், மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை விளக்கும் வகையிலும் நாமக்கல் எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து தினமணி,  நாமக்கல் காமராஜர் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் பொம்மைக்குட்டைமேடு காமராஜர் கல்வி நிறுவன வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கல்வி நிறுவனத் தலைவர் ஆர்.நல்லதம்பி தலைமை வகித்தார்.  செயலர் எஸ்.சதாசிவம்,  பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.காளியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் எம்.விஜயகுமார்,  தினமணி தருமபுரி பதிப்பு மேலாளர் டி.கதிரவன்,  ரோட்டரி சங்க நிர்வாகிகள் அருள், தினேஷ் ஆகியோர் பேசினர்.  நிகழ்வில், பள்ளியில் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு தினமணி நாளிதழ் ஒரு பிரதி மற்றும் ஒரு மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.
நாளிதழ் வாசிப்புப் பழக்கம் அன்றாட நிகழ்வுகளையும்,  வெளி உலகத்தையும்  அறிந்து கொள்ளவும், அதன் மூலம் அறிவு வளர்ச்சி பெறவும் உதவும்.  எதிர்காலத்தில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்வதில் நாளிதழ்களின் பங்கு மிகவும் முக்கியமானது. 
மரக்கன்றுகள் வளர்ப்பு என்பது சமுதாயப் பணி,  மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை வளர்த்தாலே, தமிழகத்தை பசுமையான மாநிலமாக உருவாக்க முடியும்.  மாணவர் சமுதாயம் முன்னெடுக்கும் விஷயங்கள் எப்போதும் கூடுதல் கவனத்தைப் பெறும்.   அந்த வகையில், மரக்கன்றுகள் வளர்ப்பில் மாணவர்களின் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும் என நிகழ்வில் பேசியவர்கள் வலியுறுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் எஜுகேஷனல் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் செயலர் அருண்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

மூதாட்டி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

திமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT