முகப்பு
நாமக்கல்

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:41 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் ஆர்.மெய்ஞானமூர்த்தி தெரிவித்தது: 
ஏரி, குளங்கள் மற்றும் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் கண்மாய்களில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு விளை நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது பெரும்பாலான விவசாயிகள் ஆண்டுகணக்கில் வலியுறுத்தி
வருகின்றனர்.
நீர்நிலைகளில் தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாததால் சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வேறு சில கிராமங்களில் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், மாவட்ட முழுவதும் உள்ள கண்மாய்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்து ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்வதுடன் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.