ராசிபுரம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா: ரூ. 5 லட்சம் மதிப்பில் சேவை திட்டங்கள் வழங்கல்
ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் 2018-19-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் 2018-19-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான சேவை திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தலைவராக எல்.சிவக்குமார், செயலராக எஸ்.முரளி, பொருளாளராக கே.ராமசாமி உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பதவியேற்பு விழாவில் ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் டி. சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சேவை திட்டங்களைத் துவக்கி வைத்துப் பேசினார். ரோட்டரி சங்க மண்டல உதவி ஆளுநர் எஸ். பிரகாஷ் முன்னிலை வகித்து புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்துப் பேசினார்.
விழாவில் தனியார் டிவி நிர்வாக இயக்குநர் பி.வி. கல்யாணசுந்தரம் தொழிற் சேவையைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.
முன்னதாக பிள்ளாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ. 1.25 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அலுமினிய மேற்கூரையுடன் கூடிய அறையை டி. சண்முகசுந்தரம் திறந்து வைத்துப் பேசினார். விழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் தையல் பயிற்சி பெற்ற மகளிருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், 6 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. சென்னை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு 150 சீருடைகள் மருத்துவமனை மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ராசிபுரம் தூய இருதய அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவர்கள் 400 பேருக்கு உணவு தட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் கல்வி உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரம் ஒரு மாணவருக்கு வழங்கப்பட்டது.
சங்கத்தின் சார்பில் ரூ. 50 ஆயிரம் எஜூகேசன் கார்ப்பஸ் நிதிக்கும், ரோட்டரி அறக்கட்டளை நிதியாக 2 ஆயிரம் டாலருக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. ரோட்டரி உறுப்பினர்களின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு சான்றிதழ், மெடல் ஆகியவற்றை ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் கோவிந்தராஜன் வழங்கி பாராட்டினார்.
ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பிற நிர்வாகிகள் விவரம்: தலைவர் (தேர்வு) ரகுநாதன் கண்ணன், தலைவர் (நியமனம்) எஸ்.கதிரேசன், உடனடி முன்னாள் தலைவர் கே.குணசேகர், துணைத் தலைவர்கள்-எஸ்.லட்சுமிபதி, டி.வினோத், இணைச்செயலர் ஏ.திருமூர்த்தி (எ)ரவி, சார்ஜன்ட் அட் ஆர்ம்ஸ் ஏ.ராமசந்திரன், இ.என்.சுரேந்தரன், கிளப் நிர்வாகக்குழு சேர்மேன் ரமேஷ் (எ) கே.ராமநாதன், உறுப்பினர் சேர்க்கை சேர்மேன் ஜெ.கே.சுரேஷ், பொது தொடர்பு அலுவலர் கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், திட்டத் தலைவர்கள் பி.சீனிவாசன், எஸ்.அன்பழகன், ரோட்டரி பவுன்டேஷன் தலைவர் ஆர்.அனந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.