முகப்பு
நாமக்கல்

வாராந்திர ரயில்களை ராசிபுரத்தில் நிறுத்த எம்.பி. கோரிக்கை

நாமக்கல் வழியாக இயக்கப்படும் 2 வாராந்திர ரயில்கள் ராசிபுரத்தில் நின்று செல்ல வேண்டும் என நாமக்கல் எம்.பி.   பி. ஆர்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

நாமக்கல் வழியாக இயக்கப்படும் 2 வாராந்திர ரயில்கள் ராசிபுரத்தில் நின்று செல்ல வேண்டும் என நாமக்கல் எம்.பி.   பி. ஆர்.சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷேரஸேதாவிடம் சென்னையில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:  சென்னையிலிருந்து சேலம், நாமக்கல், கரூர் வழியாக நாகர்கோவில் வரை செல்லும் விரைவு ரயில்,  ஓகாவிலிருந்து சேலம், நாமக்கல், கரூர் வழியாக ராமேஸ்வரம் வரை செல்லும் வாராந்திர ரயில்கள் இயங்கி வருகின்றன. 
ஆனால் இந்த இரண்டு ரயில்களும் ராசிபுரத்தில் நிறுத்தப்படுவதில்லை, இங்கு ரயிலில் செல்வோர் ஏராளமானோர் உள்ளதால், இந்த வாராந்திர ரயில்களை ராசிபுரத்தில் நிறுத்தி செல்ல நடவடிக்கையெடுக்க வேண்டும். 
இதுபோல், கரூர்-சேலம்,  சேலம்-கரூர் பயணிகள் ரயில் சில நாள்களாக புதுச்சத்திரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை.  இதனால் பயணிகள் களங்காணி அல்லது ராசிபுரம் செல்ல வேண்டியுள்ளது.  இந்த ரயில்களை புதுச்சத்திரத்தில் தொடர்ந்து நிறுத்தவும்,  பயணச்சீட்டு வழங்க ஊழியரை நியமிக்கவும் வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →