முகப்பு
நாமக்கல்

நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரங்கள் காயும் அவலம்

பரமத்தி, கபிலர் மலை, மோகனூர் ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது போதிய பராமரிப்பும், தண்ணீர் இல்லாமலும் காய்ந்து வருகின்றன .

Updated On : 29 மார்ச், 2018 at 8:11 AM
பகிர்:

பரமத்தி, கபிலர் மலை, மோகனூர் ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது போதிய பராமரிப்பும், தண்ணீர் இல்லாமலும் காய்ந்து வருகின்றன .
கடந்த 2 ஆண்டுகளாக ஏரி, குளங்களைத் தூர் வாருவது, சாலையோரங்களிலும்,  ஏரி, குளம், வாய்க்கால் கரைகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பது என்று முழுமையான நீராதார, விவசாய மேம்பாடு பணிகள் நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், மத்திய அரசு இத்திட்டத்துக்கு முறையான நிதி ஒதுக்காதது இத் திட்ட பணியாளர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
நன்கு வளர்ந்த மரங்கள் காய்ந்து போவதைத் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.