முகப்பு
நாமக்கல்

பொதுக்கிணறு அருகே கோயில் கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரிக்கை

பொதுக்கிணறு அருகே கோயில் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 15 மே, 2018 at 2:43 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

பொதுக்கிணறு அருகே கோயில் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலர் பழ.மணிமாறன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: நாமக்கல்-சேலம் சாலை முருகன் கோயில் பின்புறம் என்ஜிஜிஓ காலனி உள்ளது. இங்கு 1978ஆம் ஆண்டு பல்வேறு அரசுப் பணிகளில் இருந்தவர்கள் வீடு கட்டுவதற்காக இடம் வாங்கி 129 மனைகளாகப் பிரித்து வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
பொதுப் பயன்பாட்டுக்காக பூங்கா, பொதுக் கிணறு, அலுவலகம், பள்ளி ஆகியவற்றுக்கும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மனை எண் 26 இல் குடிநீர்த் தேவைக்கான பொதுக் கிணறு வெட்டி அதில் உள்ள நீரை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்தோம். பின்னர், ஊராட்சி நிர்வாகம் மூலம் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கி குடிநீர் வழங்கியதால், அக் கிணறு பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில், பொதுக் கிணறு உள்ள இடத்தில் சிலர் மாதம்தோறும் அமாவாசை, கிருத்திகை, பெளர்ணமி நாட்களில் பூஜை செய்து வருகின்றனர். மேலும் கிணறு அருகே கோயில் கட்டவும் முயற்சி செய்து வருகின்றனர்.
பொதுக் கிணறு உள்ள இடத்தில் தொடர்ந்து பூஜைகள் செய்து வருவதற்கும், கோயில் கட்டவும் முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கையெடுக்க வேண்டும். மேலும் அந்த கிணற்றில் உள்ள தண்ணீரை நகராட்சி நிர்வாகம் மோட்டார் அமைத்து தண்ணீர் இறைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.