நாமக்கல்

பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி சாதனை

DIN

பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவ, மாணவியர் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 113 பேரில் 490-க்கு மேல் 3 பேரும், 480-க்கு மேல் 13 பேரும், 470-க்கு மேல் 29 பேரும், 450-க்கு மேல் 47 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் 100 சதவிகித தேர்ச்சி அடைந்துள்ளனர். அறிவியல் பாடத்தில் 2 மாணவர்களும், கணிதத்தில் 1 மாணவரும், சமூக அறிவியலில் 1 மாணவரும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழ் பாடத்தில் 2 மாணவிகள் 100-க்கு 99 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவ ,மாணவிகளை பள்ளியின் தலைவர் சண்முகம், தாளாளர் சக்திவேல், செயலாளர் ராஜா, இயக்குநர்கள் அருள், சேகர், சம்பூர்ணம் நல்லுசாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
கந்தம்பாளையம் எஸ்.கே.வி பள்ளி சிறப்பிடம்
பரமத்தி வேலூர், மே 23: பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் கந்தம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.வி பள்ளி மாணவ, மாணவியர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இப் பள்ளியில் 490 க்கு மேல் 5 பேரும், 480-க்கு மேல் 32 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர். அறிவியலில் 7 பேரும், சமூக அறிவியலில் 41 பேரும், 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 300 பேர் 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.கே.வி மெட்ரிக் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் எஸ்.கே.வி மேல்நிலைப் பள்ளி ஆகிய அனைத்து பள்ளிகளும் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியரை பள்ளியின் தலைவர் ரவி, பொருளாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம், இயக்குநர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

SCROLL FOR NEXT