நாமக்கல்

அனுமதியின்றி போராட்டம்: திமுகவினர் கைது

DIN

குமாரபாளையத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சனிக்கிழமை மாலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
குமாரபாளையத்தில்  சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து திமுகவினர் குற்றம் சாட்டி வருவதோடு,  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தகவல் உரிமைச் சட்டத்தில்  கேட்கப்பட்ட கேள்விக்கு, குமாரபாளையத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் மது அருந்தும் கூடங்கள் ஏலம் விடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சட்டவிரோதமாக மது அருந்தும் கூடங்கள் இயங்குவதாக திமுகவினர்  புகார் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக வைக்கப்பட்ட தட்டி சேதப்படுத்தப்பட்டதாகக்  கூறப்படுகிறது. இந்நிலையில், ஆனங்கூர் பிரிவு அருகே திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலர் எஸ்.சேகர்  தலைமையில் திமுகவினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினரைக் கைது செய்த போலீஸார்  காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தேவி  முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து திமுகவினர் விடுவிக்கப்பட்டனர். ஆனால்,  சட்ட விரோதமாகக் கூடியதோடு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய திமுகவினர் 33 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT