கலாஞ்சலி கைவினைப் பொருள்கள் கண்காட்சி துவக்கம்
உத்தரப்பிரதேச கைவினை கலைஞர் சங்கம் சார்பில் கலாஞ்சலி கைவினைப் பொருள்கள், கைத்தறித் துணிகள்
உத்தரப்பிரதேச கைவினை கலைஞர் சங்கம் சார்பில் கலாஞ்சலி கைவினைப் பொருள்கள், கைத்தறித் துணிகள் கண்காட்சி நாமக்கல் திருச்செங்கோடு சாலை சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை தொடங்கியது.
இக் கண்காட்சியில் ராஜஸ்தான் கோட்டா, மகேஸ்வரி சுடிதார், ஜவுளிகள், பருத்தி சேலைகள், பிரின்டட் சேலைகள், குஜராத் ஆடைகள், குஜராத் கட்டில் விரிப்புகள், காஷ்மீர் சால்வைகள், ஜெய்ப்பூர் ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, ஜோத்பூர் கைவினைப் பொருள்கள், நாற்காலிகள், மைசூர் டெரகோட்டா, பட்டாசித்ரா ஓவியங்கள், மதுபானி ஓவியங்கள், பனை ஓலைப் பொருள்கள், காதணிகள், நகைகள், தோல் பொருள்கள், கைப்பைகள், பூத்தையல் கொண்டு தயாரிக்கப்பட்ட சுடிதார்கள், பெண்களின் ஆடைகள், கொண்டப்பள்ளி பொம்மைகள், தோல் பை, காலணிகள், ஆயிரக்கணக்கான வகையில், நவராத்திரி கொலு பொம்மைகள், பல்வேறு மாநில கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்களுக்கு 10 முதல் 20 சதவீதம் சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது.
கூடுதல் விவரம் அறிய 9360341345 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.