நாமக்கல்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்

DIN

நாமக்கல்லில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. இதில், 200 மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், நாமக்கல் மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் அண்ணா அரசு கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொ) வசந்தாமணி தலைமை வகித்தார்.போட்டிகளை தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார்.
இதில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளுக்கு நடுவர்களாகக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் கந்தசாமி, அரசு பரமேஸ்வரன், பூபதி, இன்னமுது, அழகிரிசாமி ஆகியோர் செயல்பட்டனர்.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000, இரண்டாம் பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ. 5,000 வழங்கப்படும் என உதவி
இயக்குநர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT