நாமக்கல்

காக்கவேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் திருட முயற்சி

தினமணி

ராசிபுரம் அருகே காக்காவேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் மேற்கூரையைப் பிரித்து வங்கியில் திருட முயன்ற மர்ம நபர்கள், அலாரம் சத்தம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
 இதனால், கூட்டுறவு கடன் சங்கத்திலிருந்த ரூ. 5.42 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், நகைகள் தப்பின.
 காக்காவேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். இச் சங்கம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள், நகைக் கடன்கள் வழங்கி வருகின்றன. வங்கியின் லாக்கர் அறையில் ரூ.5.42 லட்சம் மதிப்பிலான ரொக்கம், நகைகள் உள்ளனவாம். இச் சங்கத்தில் இரவு காவலர் உள்ளார்.
 இந் நிலையில், திங்கள்கிழமை அதிகாலை காவலர் சேகர், வங்கிக்குள் சென்று பார்த்தபோது, வங்கியின் மேற்கூரை பிரிந்த நிலையில் இருந்தது. திருட்டு கும்பல் உள்ளே புகுந்து திருட முயற்சித்திருப்பதும், உள்பக்க லாக்கர் அறையின் கதவுகள் கடைப்பாரையால் நெம்பி உடைக்க முயற்சித்திருப்பதும் தெரியவந்தது.
 வங்கியின் அலாரம் சத்தம் கேட்கவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
 இதுகுறித்து காவலர் சேகர், வங்கியின் செயலர் முத்துசாமிக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீஸார், ராசிபுரம் டிஎஸ்பி., காவல்துறை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்தத் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT