நாமக்கல்

ரோட்டரி சார்பில் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கல்

DIN


ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் சுழற்சி முறையில் ஆடுகள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டுக் குட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது .
ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஏழை பயனாளிகள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு சுழற்சி முறையில் ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆட்டுக் குட்டிகளை பெறும் பயனாளிகள்,  அதனை வளர்த்து அதன் இனப்பெருக்கத்தின் மூலம் கிடைக்கும் குட்டிகளில் ஒரு ஆட்டுக்குட்டியை மீண்டும் ரோட்டரி சங்கத்துக்கு வழங்க வேண்டும். இதிலிருந்து ஆண்டுதோறும் புதிய ஏழை பயனாளிகள் கிராமந்தோறும் தேர்வு செய்யப்பட்டு ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஆட்டுக் குட்டிகள் வழங்கப்படும். 
இதனையடுத்து தேங்கல்பாளையம் எம்ஜிஆர் காலனி பகுதியில் நடப்பு ஆண்டில் 10 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு சுழற்சி முறையில் ஆட்டுக் குட்டிகள் வழங்கப்பட்டன. ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எல்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ரோட்டரி சங்கத் தலைவர் (தேர்வு) ஆர்.அம்மன் ரவி, செயலர் எஸ்.முரளி, கே.எஸ்.கருணாகர பன்னீர்செல்வம், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் சிட்டி ஆர்.வரதராஜன், என்.சுரேந்திரன், துளசிராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT