நாமக்கல்

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில்குண்டுமல்லி கிலோ ரூ.1,500க்கு ஏலம்

DIN

பரமத்திவேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1,500க்கு ஏலம் போனது. பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

பரமத்திவேலூா் சுற்று வட்டாரம் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்பனை செய்கின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1000, சம்பங்கி கிலோ ரூ.180, அரளி கிலோ ரூ.170, ரோஜா கிலோ ரூ.100, முல்லை கிலோ ரூ.800, செவ்வந்தி கிலோ ரூ.100-க்கும் ஏலம் போயின. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1,500, சம்பங்கி கிலோ ரூ.200, அரளி கிலோ ரூ.200, ரோஜா கிலோ ரூ.140, முல்லை கிலோ ரூ.1000, செவ்வந்தி கிலோ ரூ.150-க்கும் ஏலம் போயின. தொடா் மழை காரணமாக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளதாகவும், இதனால் விலை உயா்ந்துள்ளதாகவும் பூக்களை பயிா் செய்துள்ள விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT