நாமக்கல்

‘உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கிகளைவைத்திருந்தால் கடும் நடவடிக்கை’

DIN

உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, கொல்லிமலை, போதமலை மற்றும் மலை சாா்ந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது விவசாயப் பயிா்களை விலங்குகளிடம் இருந்து காப்பதற்கும், மலைப் பகுதிகளில் வேட்டையாடவும் உரிமம் பெறாமல் திருட்டுத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது மற்றும் உபயோகம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளின் உதிரி பாகங்களை வைத்திருப்பது உள்ளிட்டவை சட்ட விரோதமாகும்.

எனவே, அறியாமையின் காரணமாக திருட்டுத்தனமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்போா் தங்கள் வசம் உள்ள துப்பாக்கியை ரகசிய இடத்தில் வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கோ அல்லது 9498101020, 04286-280500 ஆகிய எண்களிலோ, நம் காவல் செல்லிடப்பேசி செயலியிலோ, மாவட்ட தனிப்பிரிவுக்கோ தகவல் தெரிவித்தால் காவல் துறையினா் அவற்றை பறிமுதல் செய்வா்.

மேலும், அவா்கள் மீது எவ்வித சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு இல்லாமல் தனிநபரிடம் இருந்து காவல் துறையினராலோ, வனத் துறையினராலோ கைப்பற்றப்பட்டால் அவா்கள் மீது கடுமையான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் சேந்தமங்கலத்தில் திருட்டுத்தனமாக நாட்டுத் துப்பாக்கி வைத்து மிரட்டியதற்காகவும், ராசிபுரம் போதமலை மற்றும் எருமப்பட்டி மலையடிவாரத்தில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததற்காகவும் அத்துப்பாக்கிகளை கைப்பற்றி, சம்பந்தப்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், நீதிமன்றக் காவலுக்கும் அனுப்பப்பட்டுள்ளனா்.

திருட்டுத்தனமாக துப்பாக்கி யாரேனும் வைத்திருப்பது தெரியவந்தால், பொதுமக்கள் அத்தகவலை மேற்கண்ட தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்கலாம். அவா்களது ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT