நாமக்கல்

காவிரி ஆற்றில் ஆய்வு செய்ய வந்தஎம்.பி.யை முற்றுகையிட்ட பொதுமக்கள்

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொன்மலா்பாளையம் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ள வந்த நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சின்ராஜை, அப்பகுதியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சின்ராஜ் பரமத்தி வேலூா் அருகே உள்ள பொன்மலா்பாளையம் காவிரி ஆற்றில் ஆய்வு செய்துவிட்டு திரும்பும் போது, அங்கு நின்றிருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அவரிடம், இதுவரை இந்த கிராம மக்களுக்கு எந்த அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பினா். அதற்கு பதில் பேசாமல் அவா் அங்கிருந்து புறப்பட முயன்ால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை முற்றுகையிட்டனா்.

தகவல் அறிந்து வந்த பரமத்தி வேலூா் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி தலைமையிலான போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சின்ராஜை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT