நாமக்கல்

விவசாயி கொலை வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

DIN

பரமத்திவேலூர் அருகே விவசாயியை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம்,  பாண்டமங்கலம் ஊராட்சி, சேவல்காட்டுமூளையைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (57). விவசாயியான இவருக்கும், பூசாரிபாளையத்தைச் சேர்ந்த அன்பழகன், (39) என்பவருக்கும், வண்டிப்பாதை தொடர்பாக முன் விரோதம் இருந்தது. கடந்த 2015 - ஆம் ஆண்டு, அக்டோபர் 25-ஆம் தேதி காலை பாலசுப்ரமணியம் வண்டிப்பாதை வழியாக டிராக்டரில் சென்றார். அப்போது, அங்கிருந்த அன்பழகன், அவரது தாய் ராஜம்மாள் (54) ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசமடைந்த அன்பழகன், பாலசுப்ரமணியத்தை தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து அன்பழகன், அவரது தாய் ராஜம்மாளை கைது செய்தனர். இவ்வழக்கு, நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன் வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பில், அன்பழகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். குற்றம் நிரூபிக்கப்படாததால் ராஜம்மாள் விடுவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT