நாமக்கல்

நாமக்கல் நகரில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம்

DIN


நாமக்கல் நகரில் புதிய திட்டப் பணிகளை அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு பூமி பூஜையிடும் நிகழ்ச்சிகள், முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா ஆகியன அண்மையில்
நடைபெற்றன.
இதில், புதுச்சத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட புதன் சந்தையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றையும், நாமக்கல் நகரில் சேலம் சாலையில் முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் நகராட்சி நிதியின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் முருகன் கோயிலில் இருந்து என்.ஜி.ஓ காலனி வழியாக சின்னமுதலைப்பட்டி வரையிலான தார்ச்சாலை அமைக்கும் பணி, நாமக்கல் காவல் நிலையம் முதல் துறையூர் சாலை வரை ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்தும் பணி ஆகியவற்றை மதுவிலக்கு- ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூக நலன்- சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் தொடக்கிவைத்தனர்.
பொய்யேரிக்கரை இணைப்புச் சாலை திறப்பு: இதேபோல், துறையூர் சாலை முதல் ரயில் நிலையம் வரை ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலான சாலையையும், நாமக்கல் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.1.95 கோடி மதிப்பீட்டிலான பொய்யேரிக்கரை இணைப்புச் சாலையும், பள்ளிவாசல் தெருவில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டிலான உயர் கோபுர மின்விளக்கையும் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.
விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT