நாமக்கல்

ஞானமணி கல்வி நிறுவனங்களில் தொழில் முனைவோர்மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு

DIN

ஞானமணி கல்வி நிறுவனங்களில் தொழில் முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
இதில் ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவர் தி. அரங்கண்ணல் தலைமை வகித்தார். தாளாளர் பி. மாலாலீனா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் தொழில் முனைவோர் வளர்ச்சி மேலாளர் மணிகண்டன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சென்னை, இ.டி.ஐ.ஐ,, பைனான்சியல் கன்சல்டன்சி நிறுவனத்தின் ஹரிபாஸ்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். இதில் அவர் பேசியதாவது:
போட்டிகள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்புகளை மட்டும் நம்பாமல் தங்களது எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கின்ற வகையில், தொழில் முனைவோராக உருவாக வேண்டும். ஒரு சிறந்த தொழில்முனைவோராக மாறினால் உங்களது பொருளாதாரம் நீங்களே எண்ணிப் பார்க்காத அளவு உயரவும் வாய்ப்புகள் உள்ளன.
ஒரு தொழிலைத் தொடங்கும் முன் அந்தத் தொழில் சார்ந்த தகவல்களைத் தேடிப் பெற வேண்டும். அத்தொழிலுக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் கே. விவேகானந்தன், முதன்மை நிர்வாக அலுவலர் பி. பிரேம்குமார், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்  தி.கே. கண்ணன், பொறியியல் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) காந்தி, துணை முதல்வர் சந்திரமோகன், கல்லூரி மேலாண்மை துறை பேராசிரியர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT