நாமக்கல்

இளைஞர் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி

DIN

குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்வியல் கல்லூரியில் இளைஞர் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி புதன்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது. 
 இறுதியாண்டு மாணவர்களுக்காக நடைபெற்ற இம்முகாமுக்கு,  கல்லூரி முதல்வர் ஆர்.அர்ஜுனன் தலைமை வகித்தார்.  கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறைத் தலைவர் ஸ்ரீஜித் விக்னேஷ்  வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக, புனே குளோபல் டேலன்ட் ட்ராக் நிறுவனத்தின் பயிற்சியாளர் குமரகுருபரன் பங்கேற்றுப் பேசினார். 
மாணவர்களின் பேச்சாற்றல் திறமை,  வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுதல் மற்றும் கற்ற கல்வியினை நேர்மறையான சிந்தனைகளுக்குப் பயன்படுத்துதல் மற்றும் திறன்மேம்பாடு குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.  கல்லூரி வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்
சம்பூர்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT