நாமக்கல்

தனியார் கல்லூரி மாணவர்கள் தூய்மைப் பணி

DIN


திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் 40-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவில் படிக்கட்டுகளை தூய்மை செய்யும் உழவாரப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
தூய்மைப் பணிகளை திருச்செங்கோடு காவல்துணைக் கண்காணிப்பாளர் சண்முகம், கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள் குழந்தைவேலு, மகுடீஸ்வரன், ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், சுரேஷ்பாபு, தேசிய மாணவர் படை காமண்டர் கேசவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். கோயில் படிகட்டுகளில் சுமார் ஆயிரம் படிகளை மாணவ மாணவிகள் சுத்தம் செயதனர். மண்டபத்தில் இருந்த குப்பைகளையும் அவர்கள் அகற்றினர். பொதுமக்களிடம் வனப்பகுதிகளிலும், மலைப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வந்து வீச வேண்டாம் எனவும், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடுகளைத் தவிர்க்க வேண்டியும் கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT