நாமக்கல்

தேவேந்திர குல வேளாளர் அறிவிப்பு: ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப கோரிக்கை

DIN

ஏழு ஜாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க ஏதுவாக மானுடவியல் குழுவின் ஆய்வு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன் நிறுவனத் தலைவர் எஸ். குட்டி மற்றும் நிர்வாகிகள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழக்கூடிய குடும்பன், பான்னாடி, காலாடி, வாதிரியான், பள்ளன், தேவேந்திர குலத்தான், கடையன் ஆகிய 7 உள்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அறிவிக்கக் கோரி பல ஆண்டுகளாக இந்த சமுதாய மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட மானுடவியல் குழுவானது, தனது ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பியது. இந்த ஆய்வறிக்கையை சட்டப்பேரவையில் வைத்து, மத்திய அரசுக்கு அனுப்பபடும் என எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்த ஆய்வறிக்கை பேரவை விவாதத்துக்கு வைக்கப்படவில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மானுடவியல் ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைத்து 7 ஜாதியினரையும், தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க தமிழக அரசுப் பரிந்துரை செய்ய வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT