நாமக்கல்

அரசுப் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்

DIN

குமாரபாளையம் நகராட்சி, நாராயணா நகர் நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் என்.ஜெகதீஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியை பாரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற வட்டாரக் கல்வி அலுவலர் மேகலாதேவி, பொங்கல் பண்டிகையின் சிறப்பு குறித்து விளக்கிப் பேசினார். மாணவ, மாணவியர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி,சேலை மற்றும் தாவணியில் பங்கேற்றனர். 
பள்ளி வளாகத்தில் கோலம் போடப்பட்டு, கரும்பு, மஞ்சளுடன் அலங்காரம் செய்யப்பட்டு,  பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு, ஒயிலாட்டம், கரகாட்டம், குழு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT