மானிய விலை ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வேலைக்கு செல்லும் பெண்கள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்கள் மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் 2018-2019ஆம் நிதியாண்டில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் அரசு மானியத்துடன் வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் கடந்த 8ஆம் தேதி முதல் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு மற்றும் பதிவு அஞ்சல் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
தற்போது தமிழக அரசு வேலைக்குச் செல்லும் பெண்கள் அம்மா மானிய விலையிலான ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்கக் காலகெடுவை வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வேலைக்கு செல்லும் பெண்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.