முகப்பு
நாமக்கல்

மினி லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து: பள்ளி மாணவி பலி

மினி லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி உயிரிழந்தார்.

Updated On : 23 ஜனவரி 2019, 8:54 am IST
பகிர்:

மினி லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி உயிரிழந்தார்.
நாமக்கல் சாமி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (38), செவ்வாய்க்கிழமை மாலை தனது சரக்கு ஆட்டோவில் சோளத்தட்டு ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த ஆட்டோவில் ராஜேந்திரன், அவரது மனைவி சுகன்யா,  மகள் தனிஷ்கா ஆகியோர் பயணம் செய்தனர். 
நாமக்கல் வள்ளிபுரம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே சென்ற போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரி மீது சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன், அவரது மனைவி சுகன்யா, மகள் தனிஷ்கா (10) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். 
இதனையடுத்து 3 பேரும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக தனிஷ்கா நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 
இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த தனிஷ்கா நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.