நாமக்கல்

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், 2019 - ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற  சுமார் 22 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு,  அவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. தாங்கள் பயின்ற பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் மாணவ, மாணவியர் பெற்றுக் கொண்டனர். வரும் 24 - ஆம் தேதி வரை சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த 15 நாள்களுக்கும்,  ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு பதிவும் நடைபெறுகிறது.
இதற்கான  நடவடிக்கைகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.  மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT