நாமக்கல்

போதமலை மலைவாழ் மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகை

DIN

ராசிபுரம் அருகேயுள்ள போதமலை வாழ்மக்கள் குடிநீர் கேட்டு வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினர். 
நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் அருகேயுள்ளது போதமலை கிராமம்.  இங்கு கீழூர்,  கெடமலை, மேலூர் உள்ளிட்ட  குக்கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இந்த நிலையில்,  வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யன்குட்டை பகுதியில் மலைவாழ் மக்களுக்கு குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது அப் பகுதியில் முறையான குடிநீர் மற்றும் சாலை வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது.  இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுகின்றனர்.  இதனையடுத்து குடியிருப்புப் பகுதியில் குடிநீர்,  சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு,  மனு கொடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT