நாமக்கல்

ஓபிசி சான்றிதழ் இனி ஓராண்டு மட்டுமே செல்லும்

பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் ஓ.பி.சி. சான்றிதழ் இனி ஓராண்டுக்கு மட்டுமே செல்லும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் ஓ.பி.சி. சான்றிதழ் இனி ஓராண்டுக்கு மட்டுமே செல்லும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இ  - சேவை மையங்களில், ஜாதி, வருமானம், ஓபிசி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கட்டணம் வாயிலாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பிற்பட்டோருக்கு வழங்கப்படும் ஓ.பி.சி. சான்றிதழ் தொடர்பாக, கடந்த 4-ஆம் தேதி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இனி ஓ.பி.சி. சான்றிதழ் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதாவது, ஏப்ரல் 1-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டால், அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதியாகிவிடும். பெற்றோர், தங்களுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஏற்கனவே ஓ.பி.சி. சான்றிதழ் பெற்றிருந்தால், இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே பயன்படும். அதன்பின் பயன்படுத்த முடியாது. அவ்வாறு சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் மீண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு மேல் புதிதாக விண்ணப்பித்து ஓராண்டுக்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். அந்த சான்றிதழானது,  2020 -ஆம் ஆண்டு மார்ச் 31 வரை பயன்பாட்டில் இருக்கும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

தில்லி செங்கோட்டை காா் குண்டு வெடிப்பு வழக்கு: காஷ்மீரைச் சோ்ந்தவா் கைது

SCROLL FOR NEXT