நாமக்கல்

இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 18 பவுன் நகை பறிப்பு: போலீஸார் விசாரணை

DIN

பரமத்தி வேலூரை அடுத்த பரமத்தி அருகே இரு வேறு சம்பவங்களில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 18 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி அருகே உள்ள கீழ்சாத்தம்பூர், ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி செல்லம்மாள் (54). இவர்கள் இருவரும் திங்கள்கிழமை கீரம்பூர் சென்று விட்டு மீண்டும் கீழ்சாத்தம்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு மர்ம நபர்கள் செல்லம்மாள் கழுத்தில் இருந்த ஒன்பதரை பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பினர்.   அதேபோல் மோகனூர் அருகே உள்ள மேல் ஈச்சவாரி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மனைவி சுகந்தி (43).  இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சுண்டக்காம்பாளையம் அருகே உள்ள கோழிப்பண்னைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பியுள்ளார். புளியம்பட்டி பகுதி அருகே சென்ற போது பின்னால் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மர்ம நபர்கள் சுகந்தியை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த  எட்டரை பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். 
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமத்தி மற்றும் நல்லூர் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தனியாகச் செல்லும் பெண்களிடம் தொடர்ந்து நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் மிகவும் உஷாராக செல்ல வேண்டும் எனவும்,  கிராமப்புற சாலைகளில் பெண்கள் தனியாகச் செல்லும் போது நகைகள் அணிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் போலீஸார் அறிவரை வழங்கியுள்ளனர். மேலும்  பெண்களின் பாதுகாப்பு கருதி இரு சக்கர வாகனத்தில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்களை போலீஸார் தனிப்படை அமைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT