நாமக்கல்

பொள்ளாச்சி சம்பவம்: வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு

DIN

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவமானது தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.  இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு முதலில் புகாரளித்த பெண்ணின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை  பணியிடை நீக்கம் செய்யவும்,  இவ் வழக்கில் முதல் குற்றவாளியாக அவரைச் சேர்க்கவும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பணிப் புறக்கணிப்பில் பங்கேற்றதாக,  தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர் சங்க கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT