நாமக்கல்

மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு மிளகாய் யாகம்

DIN

பாண்டமங்கலம் அருகே கோப்பணம்பாளையம் மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு மிளகாய் யாகம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோப்பணம்பாளையத்தில் மாசாணியம்மன், அங்காளபரமேஸ்வரி, அரசாயி அம்மன் மற்றும் பேச்சியம்மன் தெய்வங்கள் ஒரே கோயில் வளாகத்தில் அமைந்துள்ளன.
இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு மாசாணி அம்மனுக்கு சிறப்பு மிளகாய் யாகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று யாகத்தில் மிளகாய்களைப் போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT