நாமக்கல்

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 7 லட்சம் திருட்டு

திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 7 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

DIN

திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 7 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையத்தில் மோர் பாளையம் பிரிவு சாலை பகுதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.
பலர் இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். 10 ஆண்டுகளாக இயங்கி வருவதாகக் கூறப்படும் இந்த நிறுவனத்தில் பழனியப்பன் என்பவர் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். நிறுவனத்தின் பங்குதாரராக உள்ள சக்திவேல் உணவு இடைவேளைக்குச் சென்றிருந்தபோது  மேலாளர் பழனியப்பன் வங்கிக்குச்
சென்றுள்ளார்.
பழனியப்பன் வங்கிக்குச் சென்று விட்டு வந்து பார்த்தபோது மேஜை டிராயர் திறந்து இருப்பது தெரியவந்தது. மேஜை டிராயரில் ரூ. 7 லட்ச பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவம் குறித்து எலச்சிபாளையம் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தினர். திருட்டு சம்பந்தமாக எலச்சிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT