நாமக்கல்

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 

DIN

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு, மாவட்டப் பொறுப்பாளர் கே.காமராஜ் தலைமை வகித்தார். குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிப் பொறுப்பாளர் அறிவொளி எஸ்.சரவணன் முன்னிலை வகித்தார். ஈரோடு மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஏ.சரவணக்குமார் பேசுகையில்,  விசைத்தறித் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் வகுப்பதோடு, தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
விவசாயம்,  ஜவுளி உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.  சாயக்கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுத்து நீர்வளம் பாதுகாக்கப்படும் என்றார். நிர்வாகிகள் சிபு, எம்.சரவணன்,  கே.செல்வராஜ், செந்தில்குமார், மகளிரணி நிர்வாகிகள் டி.சித்ரா,  டி.சொர்ணாம்பாள், ஆர்.சாந்தி, உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT