நாமக்கல்

கூட்டுறவு வேளாண் சங்கத்தில் 3,300 மூட்டை மஞ்சள் ரூ.1.40 கோடிக்கு விற்பனை

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 3,300 மூட்டை மஞ்சள் ரூ.1.40 கோடிக்கு  விற்பனையானது. 

DIN


திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர ஏலத்தில் 3,300 மூட்டை மஞ்சள் ரூ.1.40 கோடிக்கு  விற்பனையானது. 
ஏல விற்பனைக்காக  அரியலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், கடலூர், ஆத்தூர், கெங்கவல்லி,  கூகையூர்,  கள்ளக்குறிச்சி,  பொம்மிடி,  அரூர்,  ஜேடர்பாளையம்,  பரமத்திவேலூர்,  நாமக்கல்,  மேட்டூர்,  பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மஞ்சளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
இந்த மஞ்சளை கொள்முதல் செய்வதற்காக  ஈரோடு,  ராசிபுரம்,  நாமகிரிப்பேட்டை,  சேலம்  ஆகிய ஊர்களிலிருந்து 70- க்கும் மேற்பட்ட  வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலம்  மூலம் ரூ.1.40 கோடிக்கு மஞ்சள் விற்பனையானது.  விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ.7,042 முதல் ரூ.9,099 வரை விற்பனையானது.  கிழங்கு ரகம் ரூ.6,602 முதல் ரூ.7,599 வரையும், பனங்காளி ரகம் குவிண்டாலுக்கு ரூ.12,122 முதல் ரூ.15, 502 வரையும் விலைபோயின.
ஏலத்தில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. மற்ற விற்பனை நிலையங்களை விட விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு  நல்ல விலை கிடைத்ததாக கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT