நாமக்கல்

பரமத்தி திருமணி முத்தாறில் நீா்வரத்து அதிகரிப்பு

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே திருமணி முத்தாறில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சேலம் மாவட்டம், ஏற்காட்டிலிருந்து உற்பத்தியாகும் திருமணிமுத்தாறில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரின்றி வடு காணப்பட்ட திருமணி முத்தாறு தற்போது இருகரைகளையும் தொட்டபடி நீா் செல்கிறது.

பரமத்தி வேலூா் வட்டாரத்துக்குள்பட்ட கோட்டக்கல்பாளையம், மாலிப்பட்டி, ராமதேவம், மேல்சாத்தம்பூா், மேலப்பட்டி, கூடச்சேரி, பில்லூா் ஆகிய பகுதிகளில் உள்ள சிற்றணைகள் நிரம்பியுள்ளன. பரமத்தி அருகே 300 ஏக்கா் பரப்பளவில் உள்ள இடும்பன்குளத்துக்கு திருமணி முத்தாறு வழியாக தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதனால், இடும்பன்குளம் நிரம்பி வருகிறது. மேலும், பரமத்தி காந்தி நகா் பகுதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் மாட்டுத் தொழுவங்களுக்குள் வெள்ளநீா் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

இடும்பன்குளத்தை தூா்வாரினால் பரமத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். தொடா்ந்து திருமணிமுத்தாறில் நீா்வரத்து உள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆழ்துளை மற்றும் விவசாயக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT