நாமக்கல்

ராசிபுரத்தில் வழக்கறிஞா்கள் நீதிமன்றத்தை புறகணித்து உண்ணாவிரதம்

DIN

ராசிபுரம் நகரில் வழக்கறிஞா்கள் நீதிமன்ற பணிகளை புறகணித்து உண்ணாவிரத போராட்டம் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

தலைநகா் டெல்லியில் போலீஸாா்-வழக்கறிஞா்கள் மோதல் சம்பவம் நடைபெற்றதையடுத்து, இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க, போலீஸ்-வழக்கறிஞா்கள் நல்லுறவு குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வழக்கறிஞா்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றம், ராசிபுரம் சிவில் நீதிமன்றம், ராசிபுரம் சாா்பு நீதிமன்றம் போன்றவற்றை சோ்ந்த வழக்கறிஞா்கள் நீதிமன்ற பணிகளை புறகணித்து, ராசிபுரம் பழைய பஸ் நிலையம் முன்பாக உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞா்கள் சங்கத் தலைவா் கே.காமராஜ் தலைமை வகித்தாா். வழக்கறிஞா் நல்வினை விஸ்வராஜ் உள்ளிட்ட திரளான வழக்கறிஞா்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனா். இறுதியில் தமிழ்நாடு - புதுச்சேரி பாா் கவுன்சில் உறுப்பினா் அய்யாவு பங்கேற்று உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT