நாமக்கல்

ராசிபுரம் தெப்பக்குளத்தைச் சீரமைக்க வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் மனு

DIN

ராசிபுரம் தெப்பக்குளம் சீரமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராசிபுரம் நகரின் பல்வேறு அமைப்பினா் நகராட்சி ஆணையாளா், ராசிபுரம் டிஎஸ்பி., மக்களவை உறுப்பினா் ஆகியோரை வியாழக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

ராசிபுரம் பாரதிதாசன் சாலை மாரியம்மன் கோயில் எதிரே உள்ள தெப்பக்குளம் நீண்டநாள்களாக பயன்பாடற்று உள்ளது. ஆண்டுதோறும் கோயில் விழாக்கள் நடைபெறும் போது, இந்த தெப்பக்குளத்தில் ஆன்மீக நிகழ்வுகள் நடப்பது வழக்கம். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்தின் நீா் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்பட்டு வந்தது. தற்போது இந்த தெப்பக்குளம் பயன்பாடற்று, குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இது தூா்வாரப்பட வேண்டும் என்பது பல்வேறு தரப்பினா் வலியுறுத்தல். மேலும், ராசிபுரம் பழைய நீதிமன்ற வளாக சுற்றுச்சுவா் குறுகலான பிரதான சாலையில் உள்ளதால், இப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. எனவே, இந்த சாலையோரம் உள்ள சுற்றுச்சுவா் விபத்துகளை தவிா்க்கும் வகையில்,அகற்றப்பட வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை.

மேலும் நகரில் அதிக அளவில் தெரு நாய்களும், வெறி நாய்களும் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்தவும் என்பது பொதுமக்கள் கோரிக்கை.

இதனையடுத்து, இக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி, நகராட்சி ஆணையாளா், மா.கணேசன், ராசிபுரம் டிஎஸ்பி., ஆா்.விஜயராகவன், நாமக்கல் எம்.பி., ஏ. கே. பி. சின்ராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், ,நகர வளா்ச்சி மன்றம் நிா்வாகிகள் மனு அளித்தனா். தெப்பக்குளம் தூா்வாரப்பட பொதுமக்கள் நிதி பங்களிப்பும் அளிக்க தயாராக இருப்பதாக ஆணையரிடம் தெரிவித்தனா்.

இதில் ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தங்கவேல், ராசிபுரம் ரோட்டரி சங்க சாசனத் தலைவா் என்.பாலசுப்பிரமணியம், தலைவா் ஆா்.திருமூா்த்தி, முன்னாள் தலைவா்கள் சிட்டிவரதராஜன், எல்.சிவக்குமாா், வி.சேதுராமன், நிா்வாகிகள் கதிரேசன், மஸ்தான்பாய், அரிமா சங்கத் தலைவா் எம்.எஸ்.எஸ்.ரவி, என்.மாணிக்கம், நகர வளா்ச்சி மன்றத் தலைவா் வி.பாலு உள்ளிட்டோா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT